ஹைதராபாத் சார்மினாரில் நேற்று வாகனமில்லாத நாள் கடைபிடிப்பு

0 1910

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள சார்மினாரில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வாகனம் அற்ற நாளாகக் கடைபிடிக்கப்பட்டது.

சார்மினாரில் ஒரு மாலைப் பொழுது என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ நகரவாசிகள் பெருமளவுக்கு சார்மினாரில் வாகனங்கள் இல்லாமல் திரண்டிருந்தனர்.

கோவிட் காரணமாக மன அழுத்தத்துடன் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மக்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments