காஷ்மீரில் இன்றும் பயங்கரவாதிகளால், பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

0 1920

ஜம்மு காஷ்மீரில், இன்றும் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில், 2 வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

குல்காம் பகுதியிலுள்ள வான்போ என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த 3 பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்தார்.

சம்பவம் நடந்த பகுதிக்கு காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் விரைந்துள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களை உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்குச் அழைத்துச் செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுவரையில், வெளிமாநில தொழிலாளர் உட்பட 10க்கும் மேற்பட்ட அப்பாவி வெகுஜனத்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments