மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்

0 6234

மெட்டி ஒலி"சீரியல் நடிகை உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 40. கடந்த 2002ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் வெளியான மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமானவர் உமா மகேஸ்வரி. வெற்றிக் கொடி கட்டு, 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களிலும் உமா மகேஸ்வரி நடித்துள்ளார். இவருடைய கணவர் முருகன் கால்நடை மருத்துவராக இருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல் இருந்த உமா மகேஸ்வரி அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

ஈரோட்டிலுள்ள தாயார் வீட்டில் தங்கியிருந்த உமாமகேஸ்வரி உடல்நலம் மோசமாகி, மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு நடிகர், நடிகையர் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments