பூந்தமல்லி அருகே மது போதையில் அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியிலிருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி

0 3534

சென்னை பூந்தமல்லி அருகே மது போதையில் அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

செம்பரம்பாக்கத்தில் உள்ள 18 மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த 21 வயதான பிரவீன்குமார் என்ற அந்த இளைஞர், பக்கத்து ஃப்ளாட்டிலுள்ள நண்பனின் பிறந்தநாளை கொண்டாடச் சென்றுள்ளார்.

மது விருந்து முடிந்து தன்னுடைய அறைக்குச் செல்ல முயன்றபோது அது உட்பக்கமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. உள்ளே தூங்கும் நண்பர்களை தொல்லை செய்ய வேண்டாம் என எண்ணி, பின்பக்கம் உள்ள தண்ணீர் குழாயைப் பிடித்து, பால்கனி வழியாக தனது அறையின் பின்பக்க வாசலை அடைந்து விடலாம் என முடிவெடுத்துச் சென்ற பிரவீன்குமார், போதை உச்சத்தில் இருந்ததால், கால் தடுமாறி, 8வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments