பூட்டிய வீட்டுக்குள் எரிந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரியின் சடலம்... தற்கொலையா என போலீசார் விசாரணை

0 2653

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பூட்டிய வீட்டுக்குள் இருந்து எரிந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொன்னேரி மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சத்தியநாராயணன், திருவேங்கடபுரம் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

மதியம் உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டிலிருந்து புகை எழுந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பூட்டை உடைத்துப் பார்த்தபோது, எரிந்த நிலையில் சத்தியநாராயணனின் உடல் கிடந்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள் என அனைத்தும் தீயில் கருகி இருந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது அருந்திய நிலையில் வீட்டினுள் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments