ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 2 தொன்மையான சிலைகள் மீட்பு, 7 பேர் கைது

0 3077

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட தொன்மையான இரண்டு சிலைகள் மீட்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்தாமூர் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் வைத்திருந்த மூட்டை ஒன்றில் தொன்மையான மீனாட்சியம்மன் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் வேலூரில் அதே கும்பலுக்குத் தொடர்புடைய சிலரிடம் ரிஷபதேவர் சிலை இருப்பது தெரியவந்து அதுவும் மீட்கப்பட்டது.

2 சிலைகளையும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், 7 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments