பணியின் போது விபத்தில் உயிரிழந்த பெண் தலைமை காவலர் குடும்பத்திற்கு ரூ.12.57 லட்சம் நிதி திரட்டிய 2513 காவலர்கள்

0 2587

வேலூர் மாவட்டத்தில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பெண் தலைமை காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள் ஒன்றிணைந்து 12 லட்சத்து 57ஆயிரம் ரூபாயை குடும்பநல நிதியாக வழங்கினர்.

காட்பாடி காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றிவர் மாலதி. கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பறக்கும் படையில் இருந்த அவர்  ரோந்து பணிக்கு சென்ற போது கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரின் பேட்ச் ஐ சேர்ந்த, 2513 காவலர்கள் ஒன்றிணைந்து குடும்ப நல நிதி திரட்டினர். இதற்கான நிகழ்ச்சியில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், குடும்ப நல நிதிக்கான காசோலையை மாலதியின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments