வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்... கேரள முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி உறுதி

0 2330

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதித்த கேரள மாநிலத்தின் முதலமைச்சருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பினராயி விஜயனிடம் பிரதமர் உறுதியளித்தார். முன்னதாக, மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்திய பினராயி விஜயன், கேரள மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமான உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, கேரள கனமழை, தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments