எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவிடம், 500 மில்லியன் டாலர் கடனுதவியை நாடும் இலங்கை

0 2646

எரிபொருள் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடனுதவியை இலங்கை அரசு கோரியுள்ளது.

இலங்கையில் தற்போதைய நிலவரப்படி வரும் ஜனவரி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு இருக்கும் என அண்மையில் அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் உதயா கம்மன்பிலா தெரிவித்திருந்த நிலையில், கடனுதவி கோரப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் சிலோன் பெட்ரோலியம் கழகம், அந்நாட்டின் பாங்க் ஆஃப் சிலோன் மற்றும் பீப்பிள்ஸ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.

இதன் காரணமாகவும் எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தாக்கத்தால் கடும் அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து அதற்கென அதிகம் செலவிடும் நிலையில் உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments