அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது - ஜெயக்குமார்

0 3371
அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எம்.ஜி.ஆரின் நினைவில்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு திறக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், கல்வெட்டில் பெயர் பொறித்ததால் சசிகலா பொதுச்செயலாளர் ஆகிவிட முடியாது எனவும், புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? எனவும் கடுமையாக விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments