நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை Workers Lives Matters என்னும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள சீனா ஊழியர்கள்

0 2517

சீனாவில் பல நிறுவனங்கள் கடைபிடித்து வரும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான வேலை நேரத்தை எதிர்த்து workers lives matters என்னும் பிரச்சாரத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

996 என்றழைக்கப்படும் இந்த வேலை திட்டத்தில், வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெறப்பட்ட தகவல் படி, சீனாவின் Tencent, Alibaba, ByteDance உள்ளிட்ட பிரபல நிறுவனக்களில் வேலை செய்யும் 4 ஆயிரத்தும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் 12 மணி நேர ஷிஃப்டில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போவதால் தனி வாழ்க்கை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments