ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக பைக் பயணம்.. சீட் மீது ஏறி நின்றும் அட்டகாசம் செய்த இளைஞர்..

0 3358
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்ற இளைஞர்கள், சீட் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்ற இளைஞர்கள், சீட் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் சாகசம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குலசேகரபட்டினம் தசரா விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அந்த இளைஞர்களில், பின்னால் அமர்ந்திருந்த நபர் சீட் மீது ஏறி நின்று பாட்டுப்பாடிக் கொண்டு, நடனம் ஆடிக் கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இதனை உடன் சென்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆபத்தை உணராமல் பைக்கில் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments