பெண்ணிடம் நகை, பணம் வாங்கிக் கொண்டு அவர் திருப்பிக் கேட்டதால் கொலை...எதிர்வீட்டைச் சேர்ந்தவர் கைது

0 6345

கும்பகோணம் அருகே தனியாக வசித்த பெண்ணிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு அவர் திருப்பிக் கேட்டதும் கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பனந்தாளைச் சேர்ந்த டேவிட் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், அவரது மனைவி அனிதா 2 பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி வங்கிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அனிதா வீடு திரும்பவில்லை.

போலீசார் விசாரணையில் எதிர்வீட்டைச் சேர்ந்த கார்த்திக் என்பவன் சிக்கினான். அனிதாவை கொலை செய்து புதைத்துவிட்டதாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனியாக வசித்து வந்த அனிதாவிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை கார்த்திக்கின் குடும்பம் வாங்கி இருப்பதாகவும் கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்ப உள்ளதாகக் கூறிய அனிதா அவற்றைத் திருப்பிக் கேட்டதால், குடும்பமே சேர்ந்து அவரை கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, கார்த்திக்கின் மனைவி, தந்தை உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments