ராசிபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.பி. ராஜேஷ்குமார் நேரில் ஆய்வு

0 2033

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்.பி.,யுமான கே.ஆர்.என் ராஜேஸ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தெருக்கள்,  சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து  ஓடியது.

தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வீடு வீடாக சென்று பார்வையிட்ட எம்.பி.ராஜேஸ்குமார், மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments