இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை, விமான எரிபொருளை விட 30 விழுக்காடு அதிகம் என தகவல் : 15 மாதங்களில் 35 விழுக்காடு உயர்வு

0 2935

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை, விமான எரிபொருளை விட 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் டீசல் விலை 35 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து பெட்ரோல் விலை 16ஆவது முறையாகவும், டீசல் விலை 19ஆவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் 111 ரூபாய் 77 காசுகளாகவும், சென்னையில் 103 ரூபாயாகவும் உள்ளது. ராஜஸ்தானின் கங்கா நகரில் 117 ரூபாய் 86 காசுகளாக உள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை மும்பையில் 102 ரூபாய் 52 காசுகளாகவும், சென்னையில் 98 ரூபாய் 92 காசுகளாகவும், ராஜஸ்தானின் கங்கா நகரில் 105 ரூபாய் 95 காசுகளாகவும் உள்ளது.

அதேநேரத்தில் சென்னையில் விமான எரிபொருள் ஒரு லிட்டர் 74 ரூபாய் 56 காசுகளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments