கர்நாடகத்தில் இடைத்தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பது பற்றி முடிவு - பசவராஜ் பொம்மை

0 1627
கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பது பற்றி இடைத்தேர்தலுக்குப் பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பது பற்றி இடைத்தேர்தலுக்குப் பின் முடிவெடுக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், நவம்பர் இரண்டாம் நாள் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த, அவற்றின் மீதான வரி குறைக்கப்படுமா என முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், இடைத் தேர்தலுக்குப் பின், எரிபொருள் மீதான வரியைக் குறைப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments