நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும் தொண்டர்கள் மத்தியில் சசிகலா சூளுரை

0 2346

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, நாம் ஒன்றாக வேண்டும், அதிமுக வென்றாக வேண்டும் என சூளுரைத்தார்.

அதிமுகவுக்கு தம்மால் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அமைதியாக இருந்ததாக சசிகலா கூறினார்.

முன்னதாக அதிமுக கொடி கட்டிய கார் மூலம் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments