பேரணியாக சென்ற பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக காரை செலுத்திய மர்ம நபர்கள்... 16 வயது சிறுவன் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சி

0 2856

மத்திய பிரதேசத்தில் துர்கை சிலையை ஆற்றில் கரைக்க பேரணியாக சென்ற பக்தர்கள் கூட்டம் மீது கார் ஒன்று வேகமாக செலுத்தப்பட்டதால் 3 பேர் படுகாயமடைந்தனர்.

போபாலில் நடந்த இந்த சம்பவத்தில் ரிவர்ஸில் இயக்கப்பட்ட ஹூண்டாய் ஐ-10 கார் பக்தர்கள் மீது பாய்ந்தது. கார் வருவதை பார்த்து சுதாரித்துக்கொண்ட சிலர் விலகி ஓடிய நிலையில், 16 வயது சிறுவன் காரில் சிக்கி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டான்.

அந்த  சிறுவனின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. பேரணியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போபால் டி.ஐ.ஜி Irshad Wali தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments