அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3523

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், டெல்டா மற்றும் திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர்,  புதுக்கோட்டையில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடாவுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அதேபோன்று தென் கேரள கடலோரப் பகுதி மாலத்தீவு பகுதிக்கும் மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments