விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு விண்கலத்தில் புவிக்குத் திரும்பும் ரஷ்யக் குழுவினர்!

0 2846

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்ட ரஷ்யத் திரைப்படக் குழுவினர் அங்கிருந்து மீண்டும் புவிக்குத் திரும்புகின்றனர்.

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கிய ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் பூமியில் இருந்து அறுவை சிகிச்சை மருத்துவர் விண்கலத்தில் சென்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து மீண்டும் பூமிக்குத் திரும்பும் கதையுடைய சேலஞ்ச் என்னும் பெயர் கொண்ட திரைப்படத்தை ரஷ்யா எடுத்து வருகிறது.

இதில் மருத்துவராக யூலியா பெரிசில்டும், அறுவை செய்யப்படுபவராக முன்னாள் விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கியும் நடித்துள்ளனர். அவர்களுடன் இயக்குநர் கிளிம் சிபெங்கோவும் கசக்கஸ்தானின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து விண்கலத்தில் புறப்பட்டு அக்டோபர் ஐந்தாம் நாள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

அங்குப் பன்னிரண்டு நாட்களாக நடந்த படப்பிடிப்பு முடிந்ததையடுத்து மூவரும் அங்கிருந்து புவிக்குத் திரும்புகின்றனர். அவர்களின் விண்கலம் கசக்கஸ்தானில் உள்ள ஸ்டெப்பி புல்வெளியில் தரையிறங்குகிறது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments