இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று கடந்த 229 நாட்களில் இல்லாத வகையில் மிகவும் குறைந்துள்ளது - மத்திய அரசு

0 3740

இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்றுப் பரவல் கடந்த 229 நாட்களில் இல்லாத வகையில் 14 ஆயிரத்து 146 ஆகக் குறைந்துள்ளது.

இது முந்தைய நாளைவிட ஆயிரத்து 835 குறைவாகும். சோதனைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தொற்று கண்டறியப்பட்டோரின் விகிதம் ஒன்று புள்ளி இரண்டு ஒன்பது விழுக்காடாகக் குறைந்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 788 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஒரு நாளில் 144 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இன்றைய நிலவரப்படி ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 846 பேர் சிகிச்சையிலும் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். இன்று காலை வரை 97 கோடியே 65 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments