எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா பெயரில் கல்வெட்டு !

0 4052

அதிமுக பொன்விழா ஆண்டை ஒட்டி, சென்னை தியாகராய நகரிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த சசிகலா, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா என பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்துவைத்தார்.


பின்னர், எம்.ஜி.ஆரின் நினைவில்லத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். மேலும், எம்.ஜி.ஆரின் பேரன் குமார் எழுதிய "எனக்கு மட்டும் தெரிந்த எம்ஜிஆர்" என்ற புத்தகத்தை சசிகலா வெளியிட்டார்.

முன்னதாக அதிமுக கொடி கட்டிய கார் மூலம் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் மேள, தாள முழங்க மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments