அரசு ஒப்பந்தங்களில் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் பங்கேற்க தடையா?

0 2930

தரமற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டிக் கொடுத்ததாக கூறப்படும் விவாகரத்தில், அரசு ஒப்பந்தங்களில் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட சில சேதங்கள் முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

பி.எஸ்.டி. நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஆய்வு செய்த ஐ.ஐ.டி. குழு எந்த பரிந்துரையும் வழங்கவில்லை எனவும், இனிமேல் PST கட்டுமான நிறுவனம் பற்றி தவறாக செய்திகள் வெளியிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments