தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த கரடி... ஏணி வழியாக ஏறி வெளியே வந்து தப்பி ஓட்டம்

0 2754

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உணவுத் தேடி வந்த கரடி ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

அகனாடு எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகே இரும்பு மெஷ் மூடப்பட்ட தண்ணீர் தொட்டி மீது அந்த கரடி நடந்த போது பழுதடைந்த மெஷ்-ன் ஒரு பகுதி கரடியுடன் தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள், வனத்துறையினர் உதவியுடன் கரடி வெளியேற வசதியாக ஏணி அமைத்தனர்.

பிறகு அந்த கரடி ஏணியில் ஏறி கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த முற்புதருக்குள் சென்று மறைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments