கிருஷ்ணகிரியில் பிக்-அப் வேன் கவிழ்ந்து விபத்து - திருமண நிகழ்வில் கலந்துவிட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!

0 2703

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திருமண வீட்டிற்கு சென்று திரும்பிய பிக்-அப் வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

பண்டேஷ்வரம் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அகலகோட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் கலந்து விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளனர்.  வாகன ஓட்டி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒசட்டி பகுதியில் வந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயம் அடைந்த 21 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 12 வயது சிறுவன், முதியவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.     

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments