மலைச் சாலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திருப்பம்... பெற்றோரே மகனை கொன்றதாக தகவல்

0 3529

கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக பெற்றோரே மகனை கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.

வாழைகிரி கிராம மலை சாலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், நெடுஞ்சலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து புதுக்கோட்டையை சேர்ந்த திவ்யநாதன், ராஜம்மாள் தம்பதியை விசாரித்துள்ளனர்.

இதில் இறந்தவர் செல்லத்துரை என்பதும், மன வளர்ச்சி குன்றி மதுபோதைக்கு அடிமையாகி தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், கொலை செய்து மலை சாலையில் வீசிவிட்டு, மகனை காணவில்லை என போலீசில் புகாரளித்ததாக தெரிவித்துள்ளனர். தம்பதி மற்றும் மற்றொரு மகன் ஜெகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments