காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் போலாகிவிட்டது - சிவராஜ்சிங் சவுகான்

0 3069

காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் போல ஆகி விட்டது என்று மத்தியப் பிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் விமர்சனம் செய்துள்ளார்.

தலைவர் இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்றும், ராகுல் காந்தி தாம் கட்சித் தலைவர் அல்ல என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைதியான முறையில் பஞ்சாபில் ஆட்சி செய்துக் கொண்டிருந்த அமரீந்தர் சிங்கை நீக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்சியில் எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது என்று சவுகான் இந்தூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments