50வது பொன்விழா ஆண்டு முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்!

0 1859

அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அக்கட்சியின் தலைமை அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கட்சி கொடியை ஏற்றி கொண்டாட உள்ளனர். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

முதலில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாட உள்ளனர். இந்த பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் அதிமுகவின் தலைமை அலுவலகம் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments