நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிடுகிடுவென உயரும் அணைகளின் நீர்மட்டம்!

0 1818

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள  அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14அடி உயர்ந்தது.அணைக்கு நீர்வரத்து 17ஆயிரம் கனஅடியாக இருப்பதால் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையில் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து 143.86 கன அடியாக உள்ளது.  118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 70 அடியாக உள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும் தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஸ்னு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 72 அடி மொத்த உயரம் கொண்ட கருப்பாநதி அணை தொடர் நீர்வரத்து காரணமாக 61 அடியை எட்டியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments