ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான 2 வீரர்களின் உடல்கள் 48 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு

0 2092

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நீண்ட நேர துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் உடல்கள் 48 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளன.

இதனால் இந்திய ராணுவத்தின் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ஒரே என்கவுண்ட்டரில் அண்மைக் காலங்களில் இந்திய வீரர்களுக்கு இத்தனை பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டதில்லை. பூஞ்ச் ரஜோரி பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இன்னொரு துப்பாக்கிச் சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சண்டையின் போது இதுவரை 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வியாழக்கிழமை முதல் பூஞ்ச் -ஜம்மு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments