20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஓமனில் தொடக்கம்

0 4219

16 அணிகள் விளையாடும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடக்க இருந்த தொடர் தள்ளிப்போய் நடப்பாண்டில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. முதலில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் இன்று பிற்பகல் தொடங்கும் முதல் லீக்கில் ஓமன், பப்புவா நியூ கினியா நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு நடக்கும் மற்றொரு தகுதி சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

தகுதி சுற்றில் இரண்டு பிரிவிலும் சேர்த்து தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் உள்ள அணிகளுடன் மோதும். பி பிரிவில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வரும் 24-ஆம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments