கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித்தவிக்கும் கேரளா!

0 2473

கேரளாவின் பல்வேறு இடங்களில் பெருமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உள்ளிட்ட காரணிகளால், கேரளாவின் கடலோர மாவட்டங்களிலும், மலை மாவட்டங்களிலும் கனமழை கொட்டுகிறது.. கனமழையில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயம் காஞ்சிரப்பள்ளியில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடைகள், வீடுகளை மூழ்கடித்தவாறு மழைவெள்ளம் செல்கிறது.

எருமேலி - முண்டகாயம் சாலை நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இடுக்கி மாவட்டம் வெம்பேலி பகுதியில் தார் சாலையை பெயர்த்தெடுத்தவாறு வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

பத்தினம்திட்டாவை ஒட்டிய ரன்னி பகுதியிலுள்ள வீடுகள், சாலையோர கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.மலப்புரம் பகுதியை ஒட்டிய ஐக்காரப்படி என்ற இடத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டயம் பூஞ்சார் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.இடுக்கி மாவட்டத்தின் குட்டிக்கனம் பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.அதே குட்டிக்கணம் பகுதியிலுள்ள புல்லுப்புரா என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments