பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆபத்தை உணராமல் "செல்ஃபி" எடுக்கும் இளைஞர்கள்

0 3572
காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் இறங்கி குளிப்பது, துணி துவைப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலட்டாறு மற்றும் கவுன்டன்யா ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர், அகரம் ஆறு உட்பட பாலாற்றின் துணையாறுகளில் இருந்து வரும் தண்ணீரும் பாலாற்றில் கலப்பதால் 10 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க வருவோரில் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் கரையோரம் உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments