ராசிபுரத்தில் 100 வீடுகளை மிதக்கவிட்ட கனமழை..! தூக்கம் கலைக்குமா நகராட்சி?

0 6517
ராசிபுரத்தில் 100 வீடுகளை மிதக்கவிட்ட கனமழை..! தூக்கம் கலைக்குமா நகராட்சி?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வடிகால் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் படும் அவதி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மதியம் வரையில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மதிய வேளையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.

நாமகிரிப்பேட்டை, பட்டணம், வடுகம், மெட்டாலா, வெண்ணந்தூர், ஆண்டகளூர்கேட், புதுச்சத்திரம், குருசாமிபாளையம், மங்களபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

இந்த கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலைய பகுதி குளம் போல் மாறியது. பேருந்துகள் மழை நீரில் மிதந்த வண்ணம் சென்றது பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

தண்ணீர் செல்லும் பெரும்பாலான நீர்வழிபாதை அடைக்கப்பட்டதால் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. தாழ்வான தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டது. தெருக்களில் தேங்கிய தண்ணீர் வழிந்தோட இடமின்றி நீர்த்தேக்கம் போல தேங்கியதோடு 100க்கு மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது

மழைகாலத்திற்கு முன்பாக கால்வாய்களை தூர்வாரி மழை நீர் எளிதாக செல்லும் வகையில் வைத்திருக்க வேண்டிய ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால், பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்

அடுத்த பெருமழை பொழிவதற்குள் நகர் முழுவதும் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி மழை நீர் வ்ழிந்தோட விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments