பாழடைந்த கிணற்றில் இருந்து இளம்பெண் மற்றும் குழந்தையின் உடல் மீட்பு ; போலீசார் விசாரணை

0 2621
பாழடைந்த கிணற்றில் இருந்து இளம்பெண் மற்றும் குழந்தையின் உடல் மீட்பு

திண்டுக்கல் அருகே கிணற்றிலிருந்து இளம்பெண் மற்றும் அவரது 4 வயது குழந்தையின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேளாங்கண்ணிபுரத்தைச் சேர்ந்த பிரின்சி என்ற அந்தப் பெண், கடந்த வியாழக்கிழமை மதியம் தோமையார்புரத்தில் உள்ள தாயார் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தனது 4 வயது ஆண் குழந்தை தீமோஸ் லிவியுடன் சென்று மாயமானதாக சொல்லப்படுகிறது.

பிரின்சியின் கணவர் ஸ்டீபன் கஸ்பர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், தோமையார்புரம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் பிரின்சி மற்றும் குழந்தை தீமோஸ் லிவியின் உடல்கள் மிதந்துள்ளன.

இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், கொலையா, தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments