சிங்குவில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; மேலும் ஒரு நிகங்கு கைது

0 1742
சிங்குவில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் ; மேலும் ஒரு நிகங்கு கைது

அரியானாவின் சிங்கு என்னுமிடத்தில் இளைஞரைக் கொடூரமாகக் கையை வெட்டிக் கொன்ற வழக்கில் இரண்டாவதாக நிகங்கு ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் இளைஞரை வெட்டிக் கொன்று இரும்புக் கம்பியில் கட்டித் தொங்கவிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடுவதும் அவரைச் சுற்றிச் சீக்கியர்களில் ஒருபிரிவினரான நிகங்குகள் ஆயுதங்களுடன் நிற்பதுமான வீடியோ இணையத்தில் பரவியது.

இந்த வழக்கில் வெள்ளியன்று சர்வஜித் சிங் என்கிற நிகங்கு அரியானா காவல்துறையினரிடம் சரணடைந்தார். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் நாராயண் சிங் என்கிற மற்றொரு நிகங்கை அமிர்தசரஸ் மாவட்டத்தில் பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments