ஆப்கனிலிருந்து பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. எல்லையை மூடிய பாகிஸ்தான்..

0 17634
ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வருபவர்களை தடுக்கும் நோக்கத்தில் சாமன் (Chaman) எல்லையை பாகிஸ்தான் மூடியுள்ளது.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி பாகிஸ்தானில் குடியேற வருபவர்களை தடுக்கும் நோக்கத்தில் சாமன் (Chaman) எல்லையை பாகிஸ்தான் மூடியுள்ளது.

இரு வாரங்களாக இந்த எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், அதை திறக்கக்கோரி நூற்றுக்கணக்கானவர்கள் எல்லையின் இரு பக்கத்திலும் காத்துக்கிடக்கின்றனர்.

தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றப்பின் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதற்கு மேலும் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் தாங்கள் இல்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஏற்கனவே சுமார் 30 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் நிலையில், எல்லையை மூடவில்லையெனில் 10 லட்ச அகதிகள் நுழைவார்கள் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments