பைக்குடன் காதல் ஜோடியை சாலையில் தள்ளிய நாய்... தர்ம அடி வாங்கிய காதலன்..!

0 6130
சேலம் அருகே, வீட்டுக்கு தெரியாமல் ஊர்சுற்றிய காதல் ஜோடியின் இரு சக்கரவாகனத்திற்குள் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால், காதல் ஜோடி சாலையில் சறுக்கி விழுந்தனர்.

சேலம் அருகே, வீட்டுக்கு தெரியாமல் ஊர்சுற்றிய காதல் ஜோடியின் இரு சக்கரவாகனத்திற்குள்  நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால், காதல் ஜோடி சாலையில் சறுக்கி விழுந்தனர். இதில் பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் காதலனை மருத்துவமனையில் வைத்து அடித்து துவைத்தனர்...

காதில் சின்னதா தோடு..! சண்டையில் கிழிந்த சட்டை, பேண்டுடன் புள்ளிங்கோ போல காட்சி அளிக்கும் இவர்தான் காதலியுடன் ஊர் சுற்றி தெரு நாயால் பெரும் காயமடைந்த ஆனந்த்..!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த ஆனந்த், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். 16ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆனந்த், தனது காதலியிடம், ஜாலியாக ஊர் சுற்றி வரலாம் என்று நாமக்கல் நோக்கி அழைத்து சென்றுள்ளார்.

மங்களபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் காதலியுடன் அதிவேகமாக போது, காதல் ஜோடி போலவே காரணமே இல்லாமல் சாலையில் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்று, இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்ந்ததால் வேகமாக சென்ற பைக் நிலை தடுமாறியது. இதில், அந்தப்பெண்ணும், ஆனந்தும் பைக்குடன் சாலையில் சறுக்கி விழுந்துள்ளனர்.

சட்டை பேண்டு கிழிந்து சிராய்ப்பு காயங்களுடன் ஆனந்த் உயிர் தப்பிய நிலையில், அந்தப் பலத்த காயமடைந்து பெண்மயக்க நிலைக்கு சென்றார். ஆனால், இருவரையும் கீழே சாய்த்து விட்ட அந்த நாயோ, எந்த காயமுமின்றி தப்பி ஓடிவிட்டது..!

அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து காதல் ஜோடியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து குறித்து தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பதறியடித்து கொண்டு வந்த பெண்ணின் பெற்றோர், ராசிபுரம் அரசு மருத்துவமனைவாசலில் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் காதலனான ஆனந்தை கண்டதும் ஆவேசமாயினர்.

பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றியதோடு, விபத்தில் சிக்கவும் காரணமாக இருந்ததாக ஆனந்தை ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடித்து துவைத்தனர். அதிர்ஷ்டவசமாக அங்கு வந்த பெண் போலீஸ் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்தார்.

ஒரு பக்கம் தலையில் கட்டுடன் சுய நினைவின்றி சிகிச்சையில் படுத்த படுக்கையாய் கிடக்கும் காதலி, மறுபுறம் கையில் சிக்கினால் புரட்டி எடுக்க தயாராக இருக்கும் பெண்ணின் உறவினர்கள் என்று என்ன செய்வது? எங்கே செல்வது?எனத் தெரியாமல் விரக்தியுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றிவந்தார் ஆனந்த்.

காயம்பட்ட அந்தப்பெண் பெண் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து இளைஞர் ஆனந்த் மீது தங்கள் வீட்டுப்பெண்ணை கடத்திச்சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காற்று புகக்கூட இடம் கொடுக்காமல் காதல் ஜோடிகள் பைக்கில் ஊர் சுற்றும் போது நன்றாகத்தான் இருக்கும், அதிவேக பயணத்தால் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கினால் வாழ்க்கையே கேள்வி குறியாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments