கோயம்பேடு மேம்பாலம் 31 ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

0 1848
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பாலப் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி, மேடவாக்கம் மேம்பாலப் பணிகளும் ஒப்பந்த காலம் முடிந்து தாமதமாக நடைபெற்று வந்ததாகவும் அவற்றையும் விரைந்து முடிக்க அறிவுரைகள் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசு தான் எனவும் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments