காஷ்மீரில் ஒரு வாரத்தில் 13 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

0 1869
ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் சிலர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து போலீஸ் நடத்திய என்கவுன்டர்களில் இது வரை 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் சிலர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து போலீஸ் நடத்திய என்கவுன்டர்களில் இது வரை 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஸ்ரீநகரில் மட்டும் 5 தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் 3 தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். இவர்களில் 2 பேர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்போர் என்ற இடத்தில் வைத்து சனிக்கிழமை காலை என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

காஷ்மீரில் மக்களை அச்சுறுத்தி வந்த முக்கிய 10 தீவிரவாதிகளை குறி வைத்து என்கவுன்டர் நடப்பதாக விஜய் குமார் கூறியுள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் 2 போலீசாரை கொன்ற லஷ்கரே தொய்பா தீவிரவாதியான உமர் முஸ்தாக் என்பவனும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments