கேரளாவின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 2203
கேரளாவில் கன மழை பெய்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கேரளாவில் கன மழை பெய்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளியில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய கார் கயிறு கட்டி மீட்கப்பட்டது. பூஞ்ஞார் அருகே அரசு பேருந்து ஒன்று மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. எனினும் அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆலப்புழா மாவட்டத்தில் ஆறு குளங்கள் நிறைந்து சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் சங்கனாச்சேரி முதல் ஆலப்புழை வரையிலான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கோட்டயம்- குமுளி சாலையில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கன மழை பதிவாக வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments