கவிழ்ந்த வாக்கில் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்.. சம்பவ இடத்திலேயே இருவர் பலி

0 3226
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அதிவேகமாகச் சென்ற சரக்கு வாகனம் சாலை நடுவே கவிழ்ந்து சாலையோர மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அதிவேகமாகச் சென்ற சரக்கு வாகனம் சாலை நடுவே கவிழ்ந்து சாலையோர மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

ஈச்சர மரத்தின் மட்டைகளை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் மஹிந்திரா மேக்ஸ் பிக்கப் வாகனம் ஒன்று சிவகங்கையை நோக்கி அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

முந்தைய நாள் இரவு பெய்த மழையில் சாலை ஈரமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பெரிய நரி கோட்டை என்ற இடத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. பக்கவாட்டில் கவிழ்ந்த வாக்கிலேயே சென்று சாலையோர மரத்தில் வாகனம் மோதியது.

இந்த கோர விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற மணிகண்டன் என்பவரும் அவருடைய உதவியாளர் அழகுமணி என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments