நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் ; ஒரே நாளில் 1.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி

0 1384
நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

நியூசிலாந்து மக்கள் தொகையில் 2.5 சதவீதத்தினருக்கு இன்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்திய நியூசிலாந்து அரசு ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தது.

ஏராளமான பேருந்துகளும், படகுகளும் தற்காலிகத் தடுப்பூசி முகாம்களாக மாற்றப்பட்டன. விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரதமர் ஜேசிந்தா மக்கள் தடுப்பூசி செலுத்துமாறு நாள் முழுக்க வலியுறுத்தியபடி இருந்தார்.

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 644 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments