நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருமலை நம்பிக் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கயிறு கட்டி மீட்பு

0 1950
நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருமலை நம்பிக் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கயிறு கட்டி மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் திருமலை நம்பிக் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அக்கரையில் சிக்கிய நிலையில் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

களக்காடு, நான்குநேரி, வள்ளியூர் வட்டாரங்களில் கடந்த இரு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி கடைசிச் சனிக்கிழமையையொட்டி மலைக்கோவிலுக்குச் சென்ற நூற்றுக்கு மேற்பட்டோர் நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அக்கரையில் சிக்கிக் கொண்டனர்.

தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்தால் திரும்ப முடியாமல் தவித்த அவர்களைத் தீயணைப்புத் துறை, வனத்துறை, காவல்துறையினர் கயிறுகட்டி மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments