நர்சரி பள்ளிகளை திறக்கும் அறிவிப்பு தவறுதலாக வெளியாகி விட்டது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 8084
நர்சரி பள்ளிகளை திறக்கும் அறிவிப்பு தவறுதலாக வெளியாகி விட்டது

நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என்றார். பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்ற அவர் அப்படி செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை இயக்கப்பட உள்ள ஏசி நகரப்பேருந்தை துவக்கி வைத்து அமைச்சர் அதில் பயணம் செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments