குழந்தை பராமரிப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு..தாய்மார்கள் வேலைக்குச் சென்றால் பொருளாதாரம் உயரும் - அதிபர் ஜோ பைடன்

0 1719

அமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் தாய்மார்கள் வேலைக்கு சென்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற முடியும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கனெக்டிகட்டில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்துக்கு சென்று பேசிய பைடன், குழந்தை பராமரிப்புக்கு செலவு செய்ய இயலாத லட்சக்கணக்கான தாய்மார்கள் அவர்களது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வீட்டிலேயே இருந்தால், அமெரிக்கா எப்படி உலகத்துடன் போட்டி போட முடியும் என கேள்வி எழுப்பினார்.

ஊதியம் பெறாமல் குழந்தை பராமரிப்பில் ஈடுபடும் பெண்கள் அமெரிக்காவின் ஊதியம் பெறும் தொழிலாளர்களாக மாறினால் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments