அமெரிக்காவில் "ரக்பி" போட்டியின் போது சிறுவன் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயம்!

0 2059

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது சிறுவன் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

லாட் பீபிள்ஸ் அரங்கில் மேல்நிலைப்பள்ளிகள் மோதிக்கொண்ட ரக்பி போட்டியின் போது பார்வையாளர் மாடத்தில் இருந்த சிறுவன் துப்பாக்கியால் 4 பேரை சுட்டு விட்டு தன் நண்பனுடன் காரில் தப்பி சென்றான்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் மைதானத்தில் இருந்த ரக்பி வீரர்கள் தங்களை தற்காத்துகொள்ள புல் தரையில் குப்புறப் படுத்தனர்.இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் இதில் காயமடைந்தனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments