சென்னை கொளத்தூரில் ரூ. 2.86 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1509

சென்னை கொளத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகள் 560 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 குழந்தைகளுக்குத் தலா 3 லட்ச ரூபாய்க்கான காசோலை, சாலை விபத்தில் காயமடைந்தவர், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் என 312 பேருக்குத் தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் 16 பேருக்கு ஸ்கூட்டர்களையும் வழங்கினார்.

அரசு மருத்துவமனைக்குத் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் வழங்கப்பட்ட அவசர மருத்துவ ஊர்தியை மக்கள் பயன்பாட்டுக்காகக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்காகத் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மாணவர்கள் 70 பேருக்குப் புத்தகப்பை, குறிப்பேடுகள் ஆகியவற்றையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments