ஆந்திராவில் மூங்கில் குச்சிகளால் ஒருவரை ஒருவர் அடித்து சண்டையிடும் பாரம்பரிய வினோத திருவிழா... 100க்கும் மேற்பட்டோர் காயம், 5 பேருக்கு தீவிர சிகிச்சை

0 1661

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடந்த பாரம்பரிய வினோத மூங்கில் சண்டை திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஹோல குண்டா பகுதியிலுள்ள தேவரகட்டு என்ற ஊரில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக மல்லேஸ்வர  சுவாமி மற்றும் பார்வதி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

அப்போது  அப்பகுதியில் உள்ள பனிரெண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் கைகளில் சிலம்பாட்ட குச்சிகளை ஏந்தி ஊர்வலம் வருவதும், பாரம்பரிய முறைப்படி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதும் வழக்கம்.

விளையாட்டாக நடக்கும் சண்டை என்றாலும், யாரும் அத்து மீறி சென்றுவிடாதபடி பார்த்துக்கொள்ள காவல் துறையினர் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments