கன்னியாகுமரி முதல் சென்னை வரை 750 கி.மீ தொடர் ஓட்டத்தை 14 நாளில் நிறைவு செய்த சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு

0 1384

ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை முன்னிறுத்திக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 14 நாள் தொடர் ஓட்டமாக வந்த சிறுவன் சர்வேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, நலவாழ்வு உள்ளிட்ட 17 இலக்குகளை அடைவதை வலியுறுத்தி 14 நாள் தொடர் ஓட்டமாக வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் சர்வேஷ் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

இதற்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஆசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழைச் சிறுவனுக்கு வழங்கிப் பாராட்டினார்.

சாய்ராம் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோலையையும் மாணவன் சர்வேசுக்கு வழங்கினார். சாய்ராம் கல்வி நிறுவனம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிண்ன்திக்கு 12 இலட்சத்து 34 ரூபாய் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments